INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Friday, 28 November 2014

உங்கள் பிறந்த தேதி ,இடம்,நேரம் கொண்டு ஜாதகப்பலன்கள்

உங்கள் பிறந்த தேதி ,இடம்,நேரம் கொண்டு ஜாதகப்பலன்கள் அறிந்து கொள்ள இந்த இணையதளம் உதவி செய்கின்றது.  ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று பஞ்சாங்கம் வெளியிடுவார்கள். இநத இணையதளத்தில் அன்றைய பஞ்ஞாங்க குறிப்புகளை அறிந்துகொள்ளலாம். இந்த இணைய தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இந்த இணையதளம் ஒப்பன் ஆகியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் அன்றைய மாத்திற்குரிய பஞ்சாங்க விவரங்கள் கொடுத்துள்ளார்கள். நீங்கள் அன்றைய தேதிக்கான திதி.நட்சத்திரம் சூரிய உதயம் சூரிய அஸ்தமனம்.சந்திர உதயம்.சந்திர அஸ்தமனம். அன்றைய தேதிக்கான ராகுகாலம்.எமகண்டம்.குளிகை முதலியவற்றை அறிந்துகொள்ளலாம்.இது தவிர 9 விதமான பஞ்சாங்க குறிப்புகளும் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அடுத்த டேப்பில் இநது காலண்டர் முதல் தீபாவளி காலண்டர் வரை 13 வகையான காலண்டர்கள் கொடுத்துள்ளார்கள். இந்து காலண்டரில் இந்துக்களின் பண்டிகைகளும் அந்த பண்டிகைகள் வரும் தேதிகளையும் கொடுத்துள்ளார்கள். தீபாவளி காலண்டரில் தீபாவளிக்கு முன்பின் வரும் ஐந்து விரதங்களையும் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
அடுத்துள்ள டேபில் லக்ன டேபிள் முதல் கொண்டு கௌரி பஞ்சாங்கம் வரை கொடுத்துள்ளார்கள். 
அன்றைய தினத்தில் எந்த லக்கனம் எந்த நேரம் முதல் எந்த நேரம் வ்ரை வருகின்றதோ அதனை நாம் சுலபமாக அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அடுத்துள்ள டேபிள் சங்கடசதுர்த்தி.ஏகாதசி.பௌர்ணமி விரதம்.அமாவசை தினம்.பிரதேச தினம்.சிவராத்திரி.அஸ்டமி.நவமி.கிருத்திகை கந்த சஷ்டி போன்ற விவரங்கள் கொடுத்துள்ளார்கள். விரதம் இருப்பவர்களும் பண்டிகை கொண்டாடுபவர்களும் இதனை எளிதில் அறிந்துகொள்ளலாம்.கீழே உள் ள விண்டோவில் பாருங்கள்.
அடுத்துள்ள டெபில் இந்து பண்டிகைகளும் தமிழ் பண்டிகைகளும் தசரா.பொங்கல் மலையாள பண்டிகைகளின் விவரங்களும் கொடுத்துள்ளார்கள்.
அடுத்துள்ள டேபில் மெஹந்தி டிசைன்கள் ரங்கோலி கோலங்கள்.பண்டிகை வாழ்த்துஅட்டைகள்.கிருஷணா.அனுமான்.பால கணேஷ் போன்ற விவரங்களும் கொடுத்துள்ளார்கள்.
ரங்கோலி டிசைனில் உள்ள தேர் படங்கள் கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
அடுத்துள்ள டேபில் மெபைல் அப்ளிகேஷன்கள் கொடுத்துள்ளார்கள். இதில் உள்ள ராகுகால டேபிளில் சூரிய உதயத்திலிருந்து மறையும் வரை அருமையான படம் கொடுத்துள்ளார்கள்.
பெரும்பாலும் ராகுகாலங்களை நாம் 1.30 மணிநேரம் கணக்கிடுவோம். உதாரணத்திற்கு வியாழக்கிழமை ராகு காலம் 1.30 முதல் 3.00 வரை கணக்கிடுவோம்.ஆனால் துல்லியமான நேரத்தின் படி 13.20 க்கு ஆரம்பித்து 14.45க்கு முடிவடைகின்றது.  
அதுபோல் முன்னோர்கள் இறந்துவிட்டால் அவர்களின் திதி அடுத்தவருடத்தில் எந்த மாதத்தில் வருகின்றது என இதில் உள்ளீடு செய்தால் எளிதில் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பெண் மாப்பிள்ளை திருமண பொருத்தம் பார்க்க இதில் ;கொடுத்துள்ளார்கள். இதில் பிள்ளையுடைய பிறந்த குறிப்பு.பெண்ணினுடைய பிறந்த குறிப்பு குறிப்பிட வேண்டும. இதில் உள்ள கால்குலேட் கிளிக் செய்திட மணமக்களுக்கு எவ்வளவு சதவீதம்பொருத்தம் வருகின்றது என அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
நீங்கள் பிறந்தபோது எந்த நட்சத்திரம் என இதில் உள்ள கால்குலேட்டர் மூலம் அறிநது கொள்ளலாம்.
உங்கள ஜாதகப்பலன்.காலசர்ப தோஷம்.பிறந்த நட்சத்திரம்.உங்கள் நட்சத்திறத்திற்கு ஏற்ப பெயர்கள்.திருமண பொருத்தம்.உங்கள் ராசி.உங்கள் லக்கனம். உட்பட ஓன்பது வகை ஜாதக சம்பந்தமான பலன்கள்அறிந்துகொள்ளலாம்.




ஒவ்வான்றையும் விளக்கமாக பார்த்துக்கொண்டே போனால் அது நீண்டுகொண்டே செல்லும் பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

Popular post