இன்றைய கால கட்டத்தில், தொழில் சம்பந்தமான தகவல்கள், நமது சொந்த விவரங்கள் இன்னும் பல பாதுகாப்பான தகவல்களை மொபைலில் தான் சேமித்து வைக்கிறோம்.
நமது மொபைல் தொலைந்தாலோ, பிறர் திருடி விட்டாலோ, இத்தகைய பாதுகாப்பான தகவல்கள் பிறரிடம் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
இந்த சூழலில் அந்த தகவலை திரும்ப பெற முடியாவிட்டாலும், அதை பிறர் பார்த்து விட முடியாதவாறு அழித்து விடுவது சிறந்தது.
இதற்கான எளிய வழிமுறைகள் பின்வருமாறு :
மொபைல் நம்மிடம் இருக்கும் போது பின்வரும் வழிமுறைப்படி, செட்டிங்க்ஸ்-ஐ மாற்றி வைத்திருந்தால் மட்டுமே, அது களவு போன பிறகு, நமது தகவல்களை அழிக்க முடியும்.
மொபைலில் செய்து வைத்திருக்க வேண்டிய வழிமுறைகள்:
கூகுள் செட்டிங்க்ஸ்-ல் "security -> Android Device Manager"-ஐ தேர்வு செய்து கொள்ளவேண்டும்.
இப்பொழுது "Android Device Manager"-ல் "Remotely locate this device" என்ற ஆப்சன் தானாகவே டிக் செய்யப்பட்டு இருக்கும். " Allow remote lock and erase " என்ற ஆப்சனை, இப்பொழுது டிக் செய்ய வேண்டும். அதை டிக் செய்த பிறகு, "Android Device Manager"-ஐ "activate" பட்டனை அழுத்தி செயல்படுத்தி வைத்து கொள்ள வேண்டும்.
இந்த முறைகளை செயல்படுத்தி வைத்திருந்தால் மட்டுமே, மொபைல் தொலைந்த பிறகு அதன் தகவல்களை கூகுள் மூலம் அழிக்க முடியும்.
மொபைல் காணாமல் போன பிறகு, அதில் நாம் ஏற்கனவே செய்து வைத்திருக்கும் செட்டிங்க்ஸ் மூலம் கணினியிலிருந்து அத்தகவல்களை அழிக்கவும், மொபைலை லாக் செய்யவும் முடியும்.
1. கூகுள் க்ரோம் மூலம் https://www.google.com/dashboard/ என்ற முகவரியை க்ளிக் செய்து, கூகுள் அக்கௌண்டில், ஜிமெயில் முகவரியில் (மொபைலில் log in செய்திருக்கும்) log in செய்ய வேண்டும்.
2. இப்பொழுது "Android" ஆப்சனின் கீழ் உள்ள "Manage Active Devices" என்ற ஆப்சனை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது குறிப்பிட்ட ஜிமெயில் முகவரி log in செய்திருக்கும் மொபைல் ( திருட்டு / காணாமல் போன மொபைல் ) தற்போது எங்கே இருக்கிறது, ஜிமெயிலை கடைசியாக பார்த்த தேதி போன்ற தகவலுடன், "Ring", "Lock", "Erase" போன்ற ஆப்சன்களும் இருக்கும்.
3."Ring" ஆப்சனை தேர்வு செய்வதன் மூலம், அந்த மொபைலில் சத்தத்தை ஏற்படுத்த வைக்க முடியும். 5 நிமிடங்கள் வரை நீடிக்கும் இந்த சத்தம், மொபைல் silent மோடில் இருந்தால் கூட வெளியில் கேட்கும்.
4."Lock" ஆப்சனை தேர்வு செய்வதன் மூலம், திரையில் ஒரு பாப் அப் விண்டோ தோன்றும். அதில் புது பாஸ்வேர்ட், மொபைல் நம்பரை பதிவு செய்வதன் மூலம், அந்த மொபைலை பிறர் பயன்படுத்த முடியாதபடி லாக் செய்து கொள்ள முடியும்.
5."Erase" ஆப்சனை தேர்வு செய்வதன் மூலம், அந்த மொபைலிலுள்ள தகவல்களை அழிக்க முடியும்.
இவ்வாறு காணமல் அல்லது திருட்டு போன மொபைலில் இருக்கும் நமது பாதுகாப்பான தகவல்களை அளிப்பதன் மூலம், அதை பிறர் தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க முடியும்.