வாகன டிரைவர்கள் தமது வாகன டயர்களில் உள்ள காற்றின் அமுக்கத்தினை ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் அளவிடுவதற்கான அப்ளிக்கேஷனை Fobo நிறுவனம் உருவாக்கியுள்ளது.புளூடூத்தின் உதவியுடன் இணைக்கப்படும் இவை டயரிலுள்ள காற்றின் அமுக்கம் குறையும்போது எச்சரிக்கை செய்யக்கூடியதாக காணப்படுகின்றது.
Tire Pressure Monitoring System (TPMS) எனப்படும் இத்தொழில்நுட்பத்தினை iOS மற்றும் Android ஸ்மார்ட் கைப்பேசிகளின் ஊடாக பயன்படுத்த முடியும்.மேலும் இவற்றில் தொடர்ச்சியாக 2 வருடங்களுக்கு மின்னை வழங்கக்கூடிய மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.