INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Thursday 20 February 2014

முக்கியமான கோப்புகளை இணையத்தில் இலவசமாக சேமித்து வைப்பது எப்படி ? Read more: முக்கியமான கோப்புகளை இணையத்தில் இலவசமாக சேமித்து வைப்பது எப்படி ?

உங்கள் கணினியில் அடிக்கடி வைரஸ் தொல்லை ஏற்படுகிறதா ?? அல்லது உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை தவறுதலாக அடிக்கடி அழித்து விடும் பழக்கம் உள்ளதா ?? உங்கள் கோப்புகள் அனைத்தையும் பத்திரமாக ஓர் இடத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டுமா ?? அப்படியாயின் தொடர்ந்து படியுங்கள் . JustClod என்னும் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள அணைத்து கோப்புகளையும் மிகவும் பாதுகாப்பாக இணையத்தில் சேர்த்து வைக்க உதவுகிறது.
ஒரு முறை சேமித்து விட்டால் நீங்கள் பாத்து வருடம் கழித்து திரும்ப பார்க்கும் பொது கூட அதனை கோப்புகளும் மிகவும் பாதுகாப்புடன் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் .அது மட்டும் அல்ல உங்கள் கைபேசி மூலம் எங்கு இருந்தும் உங்கள் கோப்புகளை பார்வையிடலாம் , பகிர்ந்துகொள்ளலாம் .சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் இது உங்கள் இணையக்கணினி போன்றது .

இதன் சிறப்புகள்


  • இலவசமாக அனைத்துக் கோப்புகளையும் பகிர்ந்து கொள்ளும் வசதி 
  • ஐ போன் , ஆண்டரோய்ட் , விண்டோஸ் போன்ற அணைத்து கைபேசி மூலமும்  உங்கள் கோப்புகளை பார்வையிடலாம் .
  • மிக இலகுவாக உபயோகிக்கும் வசதி .



இதனை எப்படி உபயோகிப்பது என்பதை பார்வையிடலாம்

முதலில் இந்த இணையத்திற்குச் செல்லவும்
உங்கள் பயனர் பெயர் , மின்அஞ்சல் , கடவுச் சொல் போன்றவற்றை பதிவு செய்யவும் .


பின்பு கீழே இருப்பது போன்றும் பகுதியில் download  app என்னும் சுட்டியை கிளிக் செய்து உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து கொள்ளவும் .

தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிய பின் கீழே உள்ளவாறு தோன்றும் விண்டோவில் உங்கள் மின் அஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை உபயோகித்து உள் நுழையவும் .பின்பு உங்களுக்கு வேண்டுமான கோப்புகளை எளிதாக சேமித்துக் கொள்ளவும் . மென்பொருளைப் பெற இங்கே செல்லவும் 

Popular post