
வயரில்லா WI - FI இணைப்பை வழங்க கூடிய மின் ஒளி சாதனத்தை சீன விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதற்காக ஒரு விசேட LED மின்குமிழை தயாரித்ததோடு மட்டுமின்றி அதனுள் செக்கனுக்கு 150 மெகாபைட் வேகத்தினை வழங்க கூடியதாகவும் உள்ள ஒரு சிப்பினை வடிவமைத்துள்ளனர்.
ஷங்காய் பூடான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை உருவாக்கியுள்ளனர். மேலும் இத்தொழிநுட்பத்துக்கு லை- பை எனப் பெயரிட்டுள்ளனர்.
நன்மைகள்
1. ஒளி மூலமே கடத்த படுவதால் ஒரு குறிப்பிட்டி சுவற்றை தாண்டாது. ஆகவே இழப்பினை குறைக்கலாம்.
2. ரேடியோ அலைகள் பாதிப்பிலாத காரணத்தினால் தண்ணீருக்கு அடியில், விமானத்தில் கூட பயன்படுத்தலாம்.
3. வேகம் அதிகம்
குறைந்தது 4 பேராவது ஒரே நேரத்தில் பயன்பட கூடிய வகையில் இது தயாரிக்க பட்டுலதாக மேலும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.