இணையத்தளங்களுக்கு நீங்கள் செல்லும் போது உங்கள் கணினியின் தரவுகள் மற்றும் நீங்கள் இருக்கும் இருப்பிடத்தின் தரவுகள் என்பன பெரும்பாலும் கவணிக்கப்படுகின்றது. உதாரணமாக சமீப காலமாக கூகுள் போன்றே ஃபேஸ்புக்கும் உங்கள் இணையத்தேடல் தரவுகளை சேகரிக்கின்றன. அவர்கள் சொல்லும் காரணம், உங்களுக்கு பொருத்தமான விளம்பரங்களை பிரசுரிக்க வேண்டும் என்பதற்கென. ஆனாலும் இவ்வாறான செய்கை மூலம் உங்கள் இணைய சுதந்திரம் கேள்விக்குட்படலாம். அதெற்கெல்லாம் தீர்வாக அமையக்கூடியது இந்த மென்பொருள்.
சிறப்புக்கள்:
- உங்கள் நாட்டில் பார்க்க முடியாத இணையத்தளங்களைக்கூட IP ஐ மாற்றுவதன் மூலம் பார்வையிடலாம்.
- cookies ஐ தானாகவே தடுத்துவிடும்.
- இணைய வேகம் அதிகரிக்கும்.
- சிரமமின்றி தரவிறக்க உதவும். (காத்திருத்தல் தவிர்க்கப்படும்.)
- நீங்கள் எந்த இணையத்தை எங்கிருந்து பார்த்தீர்கள் என ஊகிக்க முடியாது.
- இணையத்தள நெரிசலால் ஏற்படும் இணைய இணைப்பு தாமத்தை private proxy முலம் தவிர்த்துவிடலாம்.