INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Friday, 30 December 2016

ஜெட் வேகத்தில் உங்க Wi-Fi வேலை செய்ய



ஜெட் வேகத்தில் உங்க Wi-Fi வேலை செய்ய நீங்களே செய்யக்கூடிய சிற்சில ட்ரிக்ஸ்கள்
இன்றை நவீன தொழில்நுட்பம் இல்லாமல் ஒரு மனிதனால் வாழவே முடியாது என்ற இக்க‍ட்டான
சூழ்நிலை உருவாகி வருகிறது. அந்த வகையில் ஒரு வருடத்தில் 350 நாட்கள் BSNL Broad Band சொதப்பும். மற்ற நாட்களில் ஆச்சர்யப்படுத்தும். ஆனால், அந்த 5 நச் நாட்கள் வர்தா புயல் சமயத்தில் வந்ததுதான் அதிசயம். மற்ற “ஸ்பீடு” Broad Band இன்னும் ’I am Back’ முழுமையாக சொல்ல முடியாமல் தவிக்கின்றன. எந்த சூழல் என்றாலும் Wi-Fi சிக்னல் கிடைக்கவே மாட்டேங்குது என்பதுதான் இளசு களின் எவர்க்ரீன் பிரச்னை. இந்த ட்ரிக் ஸைஎல்லாம் ஃபாலோபண்ணா, உங்க Wi-Fi ஜெட்லீ வேகத்துல வேலை பார்க்கும்.
*அலுமினியம் சிக்னலை சூப்பராக கடத்தும். எனவே அலுமினியம் ஃபாயி லை (அதான் ஜி பீர் டின் கவர்) உங்கள் ஆன்டெனா விற்குபின்னால் நிறுத்திவையுங்கள். சூப்பர்சிக்னல் கேரண்டி. அதேபோல் ரெளட்டரின் 2 ஆன்டெனாக்க ளையும் செங்குத்தாக வையுங்கள்.
*ரெளட்டர் வாங்கும்போதே பார்த்து நல்ல ரெளட்ட ராக வாங்குங்கள். அதை முடிந்த வரை வீட்டின் நடுவில் உயரமான இட மாக பார்த்து வைத்தால் நலம். காரணம், நடுவில் நிறைய பொருட்கள் இருந்தால் சிக்னல் தடைபடும். எங்கிருந்து பார்த்தா லும், உங்கள் பார்வையில் ரெளட்டர் படும்படி இரு ந்தால் இன்னும் விசேஷம்.
*ரெளட்டருக்கு அருகில் மைக்ரோவேவ், கார்ட்லெஸ் மொபைல் போன்ற கருவிகள் இருந்தால் சிக்னல் தடைபடும். காரணம் உலோக பொருட்கள் சிக்னலை வெகுவாக பாதிக்கு ம். பக்கத்துவீட்டு ரெளட்டரிடம்இருந்து உங்கள் ரெளட்டரை முடிந்தவரை தள்ளி வையுங்கள். இரண்டு சிக்னல்களும் க்ராஸ் செய்தாலும் சிக்னல் பாதிக்கப்படும்.
*சில இணையதளங்கள் மற்றும் மொபைல் ஆப்ஸ் நீங்கள் உபயோகிக்காத சமயங்களிலும் இணையத்தை பயன்படுத் திக்கொண்டிருக்கும். அதையெல்லாம்முறையாக மூடவேண்டியது அவ சியம். இல்லையேல், கணிசமான பேண்ட்விட்த்தை அவை எடுத்துக் கொண்டு வேகத்தை குறை த்து விடும்
* அவ்வபோது மோடமை ரீசெட் செய்யுங்கள். கேட்க சிம்பிளான வேலையாக இருந்தாலும் அதிக பயன்தர க்கூடிய ட்ரிக் இது. ரீசெட் செய்யும்போது சில பிரச்ச னைகள் தன்னா லேயே சரியாகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் அவ்வபோது சாஃப்ட்வேர் அப்டேட் செய்துகொண்டே இருங்கள்.

*உங்கள் வைஃபை செட்டிங் WEP-ல் இருந்தால் அதை WPA அல்லது WPA2 என்ற செட்டிங்கிற்கு மாற்றுங்கள். காரணம் WEP நெட் வொர்க்கை எளிதாக ஹேக்செய்ய இயலும். யாருக்கு தெரியும்? பார்க்க பால்வாடி பையன் போல இருக்கும் உங்கள் பக்கத்துவீட்டுக்காரரே பெரிய ஹேக்கராக இருக்கலாம்
* இது ஏற்கெனவே தெரிந்த சங்கதிதான். அவ்வ ப்போது உங்கள் வைஃபை பாஸ்வேர்டை மாற்றி க்கொண்டே இருங்கள். மொக்கையாக உங்கள் பெயரையே பாஸ்வேர்டாக வைத்தால் பக்கத்து வீட்டுக்காரர் பொங்கல் கொண்டாடிவிடுவார்.

*இது எதுவுமே வேலைக்கு ஆகாவிட்டால் பேசா மல் ஒரு ரிப்பீட்டர் வாங்கி மாட்டி விடுங்கள். ரெளட்டரின் ரேஞ்ச் 150மீட்டர்கள். ரிப்பீட்டர் அந் த ரேஞ்சை அதிகரித்து சிக்னலை பல மடங்கு பூஸ்ட்செய்யும். நம்பி வாங்குங்க. கொடுத்த காசுக்கு நல்ல எஃபெக்ட் இருக்கும்

Popular post