INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Friday, 30 December 2016

நுகர்வோரின் உரிமைகள் என்னென்ன?

பிறந்த குழந்தை முதல்,  முதியவர் வரை நுகர்வோர் என்ற தகுதி பெறாதவர் எவரும் இல்லை. எனவே, நுகர்வோரான நாம் நமது உரிமைகளை அறிந்திருப்பதும் , அந்த உரிமைகள் மீறப்படும்போது என்ன செய்வது என்ற தெளிவைப் பெற்றிருப்பது அவசியம்.

ஒவ்வொரு நாடும் நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை காலத்துக்குக் காலம் அறிமுகப்படுத்தி கொண்டிருக்கின்றன.

நுகர்வோர் பிரச்சினைகளுக்கு நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் விரைவாக, அதிக செலவில்லாமல் தீர்வும், நிவாரணமும் கிடைக்க வழிவகை செய்கிறது.

சரியான வரையறையின்படி, நுகர்வோர் என்பவர் யார்? அதை முதலில் நாம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.  



நுகர்வோர் என்பவர் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ அதற்குரிய முழுத்தொகையைக் கொடுத்துப் பெறுபவர், அதற்குரிய விலையில் ஒரு பகுதியை செலுத்தி, மற்றொரு பகுதியை பின்னர் தருவதாகக் கூறிப் பெறுபவர், பணம் தருவதாகச் சொல்லியோ அல்லது தவணை முறையில் செலுத்தியோ பெறுபவர் எவரும் நுகர்வோர் ஆவார். மேலும் பொருளையோ அல்லது சேவையையோ தான் பணம் கொடுத்து வாங்காமல், அதை மேற்கூறிய முறையில் வாங்கியவரின் முறையான அனுமதியோடு பயன்படுத்தும் நபரும் நுகர்வோர் ஆவார்.

சுருங்கச் சொன்னால், பொருள், சேவை இரண்டுக்கும் பணம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், அதை அனுபவிக்க வேண்டும்.

 உற்பத்தியாளர் மற்றும் விற்பனை நோக்கத்துடன் கொள் முதல் செய்யும் வியாபாரிகள், சேவை அளிப்போர் நுகர்வோர் ஆகமாட்டார்கள். ஆனால் சுயவேலைவாய்ப்புக்காக, தமது அன்றாட வாழ்க்கை நடத்துவதற்காக பொருட்களை வாங்கும் நபர்கள் நுகர்வோர் ஆவார்கள். உதாரணத்துக்கு ஒரு பெண் தனது சுயதொழிலுக்காக தையல் எந்திரம் வாங்குவது.

சரி, நுகர்வோரின் உரிமைகள் என்னென்ன?

* உயிருக்கும், உடைமைகளுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை சந்தைப்படுத்தப்படுவதில் இருந்து பாதுகாப்பு பெறும் உரிமை.

* நேர்மையற்ற வர்த்தக செயல்முறைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், அளவு, தூய்மை, தரநிலை மற்றும் விலை பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்வதற்கான உரிமை.

* பலவகைப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை போட்டி விலைகளில் வாங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கான உரிமை.

* நுகர்வோரின் குறைகளைக் கேட்பதற்கும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உத்தரவாதம் பெறும் உரிமை.

* நேர்மையற்ற வர்த்தகச் செயல்முறைகள் மற்றும் கட்டுப்படுத்தும் வர்த்தகச் செயல்முறைகள் போன்றவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான உரிமை.

* நுகர்வோருக்கான விழிப்புணர்வைப் பெறும் உரிமை.

* நுகர்வோர், தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவாகவும் எளிமையாகவும் தீர்வு பெறும் உரிமை.



தகவல் அறியும் சட்ட(RTI Act)ப்படி தகவல் அறிய சமர்ப்பிக்க மனு தயார் செய்வது எப்படி?

Popular post