INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Tuesday, 4 November 2014

ஒரு பென்டிரைவில் வைரஸால் பாதிக்கப்பட்டால் அதிலிருந்து தகவல்கள்

 கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு வீடியோ,ஆடியோ,டாக்குமெண்ட்.பைல்கள் போன்ற தகவல் பரிமாற்றத்திற்கு முன்பெல்லாம் பிளாப்பி பயன்படுத்திவந்தோம். பின்னர் அதுவே சிடியாக பரிணாமவளர்ச்சி அடைந்தது. பின்னர் சிடியின் பயன்பாடும் குறைந்து பென்டிரைவ் மிகுந்த பயன்பாட்டுக்கு வந்தது. பென்டிரைவ்களை ஒரு கணிணியில் இருந்து மற்றும் ஒரு கணிணிக்கு தகவல்கள் பாரிமாரும்சமயம் இலவசமாக வைரஸ்களும் கணிணியில் இருந்து பென்டிரைவ்விற்கு பரவிவிடுகின்றன. ஒரு பென்டிரைவில் வைரஸால் பாதிக்கப்பட்டால் அதிலிருந்து தகவல்கள் பெறஇயலாது.அதிலிருந்து தகவல்களை மீண்டும்பெற நாம் Start - Run -CMD என தட்டச்சு செய்து பின்னர் எந்த டிரைவில் பென்டிரைவ் உள்ளதோ அதனை தேர்வு செய்து பின்னர் தகவல்களை பெறவேண்டும். சாதாரண மக்களுக்கு இது மிகுந்த சிரமமே...வைரஸ் பாதித்த பென்டிரைவிலிருந்து அனைத்து பைல்களையும ;மீட்டு எடுக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. பாமர மக்களின் வேலையை சுலபமாக மாற்றிவிடுகின்றது. இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட் விண்டோ ஓப்பன் ஆகும்.  
இதில் நம்மிடம் உள்ள பென்டிரைவிற்கான டிரைவினை தேர்வு செய்யவும். இதில் கொடுக்கப்பட்டு:ள்ள ரேடியோ பாக்ஸில் தேவையானதை கிளிக் செய்யவும். பின்னர் இதில் உள்ள Proceed பட்டனை கிளிக் செய்யவும்.
 உங்களுக்கான இந்த விண்டோ திறக்கும்.சில வினாடிகள் நீங்கள் ஏதுவும் செய்யாமல் காத்திருக்கவும்.
 உங்கள் தகவல்கள் மீட்டு எடுக்கப்பட்டது என உங்களுக்கு தகவல்வரும்.

Popular post