தவறாகவோ அல்லது அஜாக்கிரதையாலோ முக்கியமான கோப்புகளை அழித்துவிட்டு அதை
மீட்டெடுக்க Recovery Software - ஐ நாடுகின்றனர். அதிலும் இலவச
மென்பொருள்களையே பலரும் விரும்புகின்றனர்.
இலவசமாக கிடைக்கும் மென்பொருள்களில் ஒரு குறிப்பிட்ட வசதிகளை மட்டுமே பெற
முடியும். அதாவது ஒரு சில நாட்களுக்கு முன் (சமீபத்தில்)அழித்த கோப்புகளை
மட்டுமே பெற முடியுமாறு அந்த மென்பொருள்களை வடிவமைத்திருப்பார்கள்.
கூடுதலான வசதிகளைப் பெற வேண்டியிருப்பின் அத்தகைய மென்பொருள்களை பணம்
கொடுத்து (Paid Software) வாங்க வேண்டும்.
அவ்வாறில்லாமல் ஒரு இலவச மென்பொருளே அழித்த கோப்புகளை அனைத்து
கோப்புகளையும் மீட்டுத் தந்தால் நன்மைதானே..!ஒரு இலவச மென்பொரு அழித்த
கோப்புகளை மீட்டுத் தருகிறது. அதுவும் முற்றிலும் இலவசமாக. இது கணினயில்
அழிக்கப்பட்ட கோப்புகளை சேதமில்லாமல் Recover செய்வதில் மிகச்சிறப்பாக
செயல்படுகிறது.
மென்பொருளின் பெயர்: ரெய்ட் டூ ரெய்ட் (Raid to Raid)