ஐரோப்பா யூனியன் தற்போது ஒரு புது டெக்னாலஜியை கொஞ்சம் கூட சத்தம் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது. இதன் பெயர் vehicle telematics, இது உங்கள் புது காரில் உள்ள மைக்ரோபிராசஸர் – இதன் மூலம் நீங்கள் அதிக வேகமாக சென்றாலும், ரோட்டில் ஸ்டன்ட் அடித்தாலும் போலீஸ் செக் செய்ய நிறுத்த சொன்னாலும் நிறுத்தாமல் சேஸிங் செய்தால் உங்கள் வண்டியை போலீஸ் ஒரு நிமிடத்தில் நிறுத்த முடியும் போன்ற ரிமோட் கண்ட்ரோல்.
இது ஏற்கனவே அமெரிக்கா / ஐரோப்பா போன்ற வாடகை கார் நிறுவனங்கள் இதை இன்ஸ்டால் செய்திருக்கின்றன. இதன் மூலம் வாடகை காலம் முடிந்து நீங்கள் காரை ரிட்டர்ன் செய்யாமல் இருந்தால் உங்கள் எஞ்சினை நிறுத்த இயலும். அதன் மூலம் அன்ஹ காரை எங்கிருக்கிறது என்றூ ஜிபிஎஸ் மூலம் கண்கானித்து உடனே காரை மீட்டு கொள்வார்கள். இதை இன்ஸ்டால்மென்ட்டுக்கு கார் வாங்கினால் கூட அந்த ஃபைனான்ஸ் கம்பெனி செய்கிறது. இது இந்தியாவுக்கும் வரலாம் என நினைக்கிறேன்.
இது எப்படி சாத்தியமாகிறது? என்று தெரிந்து கொள்ல ஆசையா? ஒவ்வொரு கார் தயாரிக்கும் போதே இந்த வசதியை மைக்ரோபிராசஸர் மூலம் இந்த டெக்னாலஜியை இஞ்செக்ட் செய்து விடுவதால், கார் ரிஜிஸ்டர் ஆகும் போது அந்த ரெஜிஸ்ட்ரேஷன் பிளேட்டின் டீட்டெயில் போலீஸிடம் இருக்கும். இதனால் தவறு செய்யும் கார்களை போலீஸ் ஜி பி எஸ் மூலம் ரிமோட் லொகேஷனில் இந்த காரை நிறுத்த இயலும்.
அது சரி..நம்பர் பிளேட்டை மாத்திட்டு போன என்ன பண்ணுவாங்கன்னு போலீஸ்கிட்ட கேட்டா அதுக்கு வழி இருக்கு, போலீஸ் ரேடாரில் இந்த மாதிரி நிக்காமல் போகும் தறிகெட்ட கார்கள் ஜிபிஎஸ்ரேடார் மூலம் கூட நம்பர் பிளேட் இல்லாமலே கண்டுபிடித்து நிறுத்த இயலும்……….!