நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?
1. உங்கள் கைதுக்கான காரணங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நீங்கள் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு
3. உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு
4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நீங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்
5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது உங்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும்
விலங்கிடலாமா?
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது. கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது
கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல்
கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்திலிருந்து நீதி மன்றம் செல்ல தேவைப்படும் பயண நேரம் நீங்கலாக) அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. காவல் துறைக்கு இல்லை.
குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு அவர் காவலில் தொடர சொன்னால் ஒழிய 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட காவலில் வைக்க கூடாது.
*******
கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளைகள்
1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.
2. கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்
3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.
4. கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.
5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்
6. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையை பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.
7. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
8. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.
******
நிற்க. இவையெல்லாம் நிஜத்தில் காவல் துறை செய்கிறதா அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது ?
முடிந்த வரை காவல்துறை இவற்றை செய்யும். அல்லது அவர்கள் ரிக்கார்ட் அப்படி இருக்கும் ! இவற்றில் சில முக்கிய விஷயங்கள் அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும். அத்தகைய நேரங்களில் காவல் துறை அதிகாரியை கோர்ட் கண்டிக்கலாம். சில நேரங்களில் சில நடைமுறைகள் பின்பற்றா விட்டால் அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்யலாம்.
- சட்டபஞ்சாயத்துஇயக்கம்
Wednesday, 22 January 2014
Popular post
-
Free download the copy of Hiren's Boot CD 14.1 from the link below which is about 523MB http://www.hirensbootcd.org/dow...
-
Removewat 2.2.9 [Windows 7, 8, 8.1] Activator Full Free Download Removewat 2.2.9 [Windows 7, 8, 8.1] Activator Full Free Download Rem...
-
உங்கள் பிறந்த தேதி ,இடம்,நேரம் கொண்டு ஜாதகப்பலன்கள் அறிந்து கொள்ள இந்த இணையதளம் உதவி செய்கின்றது. ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டு தினத்தன...
-
பயன்மிகு இணையவழிச் சேவைகள் இணைய நூலகங்கள் நூலகங்கள் நம் எண்ணங்கள், கனவுகள்,திறன்கள் என அனைத்தையும் தன்னுள் காத்து வைத்திருக்கும் பொக்...
-
வலைப்பூக்கள் ஒரே தளத்தில் http://best-tamil-blogs.blogspot.com/ http://www.valaipookkal.com/ http://www.suthanthira-...
-
நாம் தினமும் பல கனவுகளை காண்கிறோம். சில கனவுகளின் தாக்கத்தால் நாம் திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்து எழுகிறோம். பல கனவுகளுக்கும் நடக...
-
AIRTEL FREE INTERNET HACK UNLIMITED Hello Friends We are going to share you this trick with which you can browse and download for fre...
-
A high quality program that can cure bad sectors in hard drive. This system largely in a position to repair the logical problems, b...
-
வாட்ஸ் அப்பின் ட்ரிக்ஸ் வார்த்தைக்கு முன்னும், பின்னும் * குறியை சேர்த்தால் போல்டாகவும், _ குறியை சேர்த்தால் சாய்வு எழுத்துக்களாகவும், ...
-
நல்ல எழுத்தாளர்கள் மற்றும் பதிவர்களின் தேவை இணையத்தில் அதிகமாக உள்ளது . பிளாக்கர் / வோர்ட்பிரஸ் போன்றவற்றில் பல வலைப்பூக்கள் இருதாலும் நல...