android-இன் பயன்பாட்டினை அனைவரும் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்! இருப்பினும் சிலர் இதனை வெறும் Nokia 1100 போல் பயன்படுத்தி என்னை சோதிக்கின்றனர் ( அதனால் தான் இந்த பதிவை இடுகிறேன்). இதனை முழுமையாக பயன்படுத்துவது என்றால் அதில் நாம் நிறுவி இருக்கும் நிரலை பொறுத்தே! சரி இப்பொழுது சில நிரல்களை பார்ப்போம் (இந்த நிரல்கள் யாவும் நான் பயன்படுத்திக் கூறுவதே ஆகும)
1. App backup & restore:-
இந்த நிரல் நீங்கள் நிறுவியுள்ள நிரல்களின் நகலை எடுத்து SD கார்டில் சேமித்து வைத்துக் கொடுக்க உதவும்.பின்பு அதனை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் நிறுவிக்கொள்ளவும் உதவும் . அது மட்டும் அல்லாமல் அந்த நிரல்களின் நகலை வேறு நபர்களிடமும் பகிரிந்துக்கொண்டு அதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் உதவும்!
2. Camscanner:-
இந்நிரல் முக்கியமாக மாணவர்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறேன்.இதன் மூலம் உங்கள் கைப்பேசியின் புகைப்படக் கருவியை ஒரு வருடியாக (scanner) பயன்படுத்தி பல தாள்களை வருடிக்கொள்ளலாம். பின்பு அதனை அச்சுப்பொறியின் மூலம் அச்செடுத்துக் (print) கொள்ளலாம்.இதற்கு ஒரு 2.5 மெகா பிக்சல் புகைப்படக் கருவியே போதுமானது.
3. Airdroid:-
USB கேபிள் இல்லமால் ஒரு கோப்பினை உங்கள் கணினியிலிருந்து கைபேசிக்கோ அல்லது கைப்பேசியிலிருந்து கணினிக்கோ பரிமாற்ற இந்த நிரல் மிகவும் உதவும். அதற்கு நீங்கள் ஒரே இணைய இனைப்பில் இருப்பது அவசியம். அதாவது கைப்பேசியில் வேறொரு இணைய இணைப்பில் இருந்துக்கொண்டு மற்றும் கணினியில் வேறொரு இணைய இணைப்பில் இருந்தால் இதனை பயன்படுத்த முடியாது.
4. Mxplayer:-
இந்த ஊடக இயக்கியின் மூலம் நீங்கள் எந்த விதமான ஊடகத்தையும் பார்க்க இயலும் மற்றும் கைப்பேசியில் படம் பார்க்க சிறந்த நிரல் எனக் கூறலாம்!
5. ttpod:-
பாட்டினை பாட்டு வரிகளுடன் கேட்க சிறந்த நிரல் இது. இது minilyrics மென்பொருள் போன்று இயங்கும். நீங்கள் கைபேசியை உலவிக்கொண்டிருக்க பாட்டு வரிகள் பின்னே நகர்ந்துக் கொண்டே இருக்கும். இதன் பின்னடைவு ஆங்கிலம் மற்றும் சில ஹிந்தி பாடல்களுக்கு மட்டுமே பாடல் வரி சொல்லும். இருப்பினும் இது உங்கள் கைப்பேசியில் இருக்கும் ஊடக இயக்கியை விட சிறந்தது!
6. Dolphin Browser:-
இவ் உலாவியின் தனிச் சிறப்பு அதில் உள்ள கூட்டுருபே (addon) ஆகும்.அதன் சில சிறப்பான கூட்டுருபுக்கள் வருமாறு...
அ)web2pdf - வலைப்பக்கத்தை pdf கோப்பாக மாற்ற.
ஆ )Desktop Toggle - வலைப்பக்கத்தை கணினியில் காண்பது போல காணலாம் அல்லது வலைபக்கத்தை கைப்பேசி உருமாட்டிலும் காணலாம் (mobile version )
இ )Dolphin Reader - வலைப்பக்கத்தை விளம்பரம் மற்ற தொல்லையிலிருந்து அகன்று பக்கத்தை மட்டும் காண (இரவில் இணையத்தில் உலவும் பொது மிகவும் உதவும்)
7. Wordweb :-
இதுவே android-இல் சிறந்த இணைய இணைப்பில்லா ஆங்கில அகராதி ஆகும். அதனால் இதனை எப்பொழுதும் கைப்பேசியில் வைத்துக் கொள்ளவது நல்லது!
8. Kingsoft Office:-
இது android-க்கு சிறிய Microsoft Office போன்றது! இதில் Power Point,Pdf,Docx அல்லது doc போன்ற பெரும்பாலான கோப்புகளை திறந்து அதனுள் திருத்தம் செய்யவும் வசதி தருகிறது!
9. Astro File Manager & Bluetooth Module:-
SD கார்டில் உள்ள கோப்புகளை Copy/Paste/Move மற்றும் Drag செய்ய எளிமையான நிரல் இந்த நிரலே!மேலும் இதனோடு இன்னொரு நிரலான Bluetooth Module, ப்ளுடூத் மூலம் மற்றவர்களின் SD கார்டில் உள்ள கோப்புகளை காணவும் அதனை சேகரிக்கவும் மிகவும் உதவுகிறது.
12. Viber:-
ஒரு SIM கார்டு செய்யும் அடிப்படை வேலைகள் அனைத்தும் இது செய்யும்.இலவசமாக குறுஞ்செய்தி மற்றும் அழைக்க இது மிகவும் உதவும் !அவ்வாறு அவர்களை அழைக்க மற்றும் குறுஞ்செய்தி அனுப்ப அவர்களிடமும் இந்த நிரல் இருப்பது அவசியம்.மேலும் இணைய இணைப்பு இருப்பதும் அவசியம்.
11. Free SMS India:-
இதனை வைத்து நீங்கள் இந்திய முழுவதும் இலவசமாக குறுஞ்செய்தியை அனுப்ப இயலும்.அதற்கு ஒரு இணைய இணைப்பு உங்கள் கைப்பேசியில் இருந்தால் போதுமானது!.முப்பது ரூபாய்க்கு SMS பேக் போடுவதற்கு அறுவது ரூபாய்க்கு Internet பேக் போட்டால் மிகவும் பயன்படும் மற்றும் குறுஞ்செய்தியை இலவசமாகவும் அனுப்ப இயலும். (இதனைத்தான் நான் செய்து கொண்டு இருக்கிறேன்)
12. Pdanet:-
கைப்பேசியில் உள்ள இணைய இணைப்பை கணினியுடன் பகிர USB Tethering உபயோகப்படும். ஆனால் android-இல் உள்ள USB Tethering Mode சரியாக Windows-இல் நிறுவ இயலாது (எனது கணினியில் நிறுவ முடியவில்லை!). அந்நிலையில் இது மிகவும் பயன்படும். மேலும் இதற்கு நீங்கள் Pdanet-ஐ கணினியிலும் நிறுவ வேண்டும்!அதனை தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்:-
(பின்பு உங்கள் கைப்பேசியிலும் இந்த நிரலை நிறுவவேண்டும்).
13. Pocket :-
இணைய இணைப்பில்லாமல் ஒரு பக்கத்தை காண இந்த நிரல் மிகவும் உதவும்.அவ்வாறு காண அந்த பக்கத்தை நீங்கள் இணைய இணைப்புடம் காணும் போதே பாக்கெட்டில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்!
14. MyCalendar:-
நண்பர்கள்,உறவினர்களின் பிறந்த நாட்களை மறக்காமல் இருக்க உதவும் ஞாபகமூட்டி! இது Facebook-இல் உள்ள அனைத்து நபர்களின் பிறந்த நாளும் மற்றும் நீங்களாக சேர்க்கும் பிறந்த நாட்கள் அனைத்தையும் ஞாபகப்படுத்தும்!
15. NewsHunt:-
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் (தெலுகு,மலையாளம்,கன்னடம் ...) உள்ள பெரும்பால செய்தித்தாட்களை(இந்தியன் எக்ஸ்பிரஸ்,டெக்கான் ....) படிக்கலாம்! உதாரணத்திற்கு தமிழில் தினமலர்,தினகரன்,தினமணி,ஒன் இந்திய,பி பி சி ஆகிய செய்தி தாட்களை படிக்கலாம்.(இணைய இணைப்பு அவசியம்)
16. SMS Backup And Restore:-
குறுஞ்செய்தியை சேகரிக்க மற்றும் சேகரித்ததை மீண்டும் நிறுவி படிக்க இந்த நிரல் உதவும்.சேகரித்த குறுஞ்செய்தி அனைத்தும் .xml வடிவில் இருக்கும்.
Thursday, 11 October 2012
Popular post
-
பயன்மிகு இணையவழிச் சேவைகள் இணைய நூலகங்கள் நூலகங்கள் நம் எண்ணங்கள், கனவுகள்,திறன்கள் என அனைத்தையும் தன்னுள் காத்து வைத்திருக்கும் பொக்...
-
Free download the copy of Hiren's Boot CD 14.1 from the link below which is about 523MB http://www.hirensbootcd.org/dow...
-
வலைப்பூக்கள் ஒரே தளத்தில் http://best-tamil-blogs.blogspot.com/ http://www.valaipookkal.com/ http://www.suthanthira-...
-
Removewat 2.2.9 [Windows 7, 8, 8.1] Activator Full Free Download Removewat 2.2.9 [Windows 7, 8, 8.1] Activator Full Free Download Rem...
-
A high quality program that can cure bad sectors in hard drive. This system largely in a position to repair the logical problems, b...
-
இன்றைய கால கட்டத்தில், தொழில் சம்பந்தமான தகவல்கள், நமது சொந்த விவரங்கள் இன்னும் பல பாதுகாப்பான தகவல்களை மொபைலில் தான் சேமித்து வைக்கிறோம்....
-
உங்கள் பிறந்த தேதி ,இடம்,நேரம் கொண்டு ஜாதகப்பலன்கள் அறிந்து கொள்ள இந்த இணையதளம் உதவி செய்கின்றது. ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டு தினத்தன...
-
கம்யூட்டர் எவ்வாறு நமது வாழ்க்கையில் ஒரு அத்தியாவசமான பொருளாக மாறியதோ அதுபோல இணையமும் நம் வாழ்வில் இரண்டற கலந்துவிட்டது.இன்றைய நவீன உலகி்ல் ...
-
ஈமெயில் அனுப்ப பல்வேறு தளங்கள் உதவிசெய்கிறன, அதில் மிகவும் பிரபலமான தளங்கள் யாஹு, ஜிமெயில், ஹாட்மெயில் போன்றவை ஆகும். இவற்றின் மூலம் அனுப்ப...
-
கூகிள் அட்சென்ஸ் பெறுவது எப்படி ? 10 நிமிடத்தில் பதிவுக்கு போகும் முன் : என்னுடைய இந்த வலைபூவில் பதிவு இரண்டு மாத காலமாக எதுவும் பத...