நீங்கள் அடிக்கடி பயணிப்பவரா? பயணத்தின்
போது உங்கள் இலத்திரனியல் சாதனங்களை, அவற்றின் உபகரணங்களை உரிய முறையில்
எடுத்துச் செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
மாத்திரைகள், ஸ்மார்ட்போன்கள் போன்ற சாதனங்கள் சாதாரணமாக கச்சிதமாகப்
பயன்பட்டாலும், பிரயாணத்தின் போது அவற்றின் மின்னேற்றி (chargers), வயர்கள்
(Wires) போன்றவற்றை ஒழுங்குபடுத்துவது சிரமமான ஒன்று.
இங்கே பயணத்துக்கான தொழில்நுட்ப உபகரணங்கள் சிலவற்றைப் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. இவை உங்கள் பயணத்தை இலகுவாக்க உதவக்கூடும்.
Polished Oval WiFi/2GB USB Cufflinks
ஃபிளாஷ் டிரைவ் (Flash Drive) மற்றும்
Wi-Fi hotspot ஆகிய தொழிநுட்பத்தைக் கொண்டுள்ளன. இவற்றை உங்கள் மடிக்கணினி
(Lap top), குளிகை (Tablet) மற்றும் ஸ்மார்ட்போன் (Smart Phone) போன்ற
சாதனங்களுடன் இணைக்க முடியும்.
Apple MagSafe Airline Adapter
இந்த சாதனத்தை விமானத்தின் இருக்கையின் பவர் போர்ட்களில் செருகி
உபயோகிக்கலாம். இதை மேக்புக் (MacBook), மேக்புக் ப்ரோ ( MacBook Pro
)அல்லது மேக்புக் ஏர் (MacBook Air ) என்பவற்றுக்குப்பயன்படுத்தலாம்.
குறிப்பு: இந்த அடாப்டர் (Adapter) உங்கள் மடிக்கணினியை இயக்குவதற்குரிய மின்சாரத்தைத் தரும். ஆனால் மடிக்கணினி மின்கலத்தை (battery) மின்னேற்றாது.
Grid-It iPad
உங்கள் பயணப்பை வயர்கள் (Wires ), கேஜெட்டுகள் (Gadgets) மற்றும் இதர சார்ஜர்ஸ் (Chargers) போன்றவற்றால் நிரம்பியுள்ளதா? இந்த உபகரணத்தைப் பயன்படுத்தி அவற்றை ஒழுங்கு செய்யலாம். இதிலுள்ள neoprene பாக்கெட், உங்கள் குளிகையை(Tablet) பாதுகாக்கிறது. இதிலுள்ள பட்டைகளில் உங்கள் பொருட்களை கட்டமைப்பாக அடுக்கலாம். இது மேக்புக் (MacBook)/ மேக்புக் ப்ரோ ( MacBook Pro ) மற்றும் ஒரு ஐபேட் (iPad) ஆகியவற்றைப் பாதுகாக்க விசேஷமாக வடிவமைக்கப்பட்டதாகும். இதில் உங்கள் பொருட்களை ஒழுங்குபடுத்த மிகக்குறைந்த நேரமே எடுக்கும்.
Virtual Keyboard Key Chain
இதை ப்ளூடூத் வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் (Bluetooth wireless technology) மூலம் குளிகை (tablet) மற்றும்
ஸ்மார்ட்போன் (smartphone) என்பவற்றுடன் இலகுவாக இணைக்கலாம். இது எந்தவொரு தட்டையான
மேற்பரப்பிலும் விசைப்பலகையை வெளிக்காட்டும். சாவிக்கொத்தாக பயன்படுத்தக்கூடிய இச்சாதனமானது, ஒரு சிகரெட் பெட்டியின் அளவேயாகும்.
HDMI Pocket Projector
இந்த பாக்கெட் அளவான சாதனம் ஸ்மார்ட்போன்கள் (smartphone), குளிகைகள் (Tablets), மடிக்கணினிகள் (Laptops), கேம் முனையங்கள் (Game Consoles), டிவிடி பிளேயர்கள் (DVD Players) மற்றும் கேமராக்களுடன் (Cameras) இணைக்கக் கூடியதாக உள்ளது.
Belkin Mini Surge Protector Dual USB Charger
இதன் மூலம் ஒரேயடியாக மடிக்கணினி (laptop), குளிகை (tablet), கமெரா (camera) , கைபேசி (cell phone )
மற்றும் mp3 பிளேயர் (mp3 player) ஆகியவற்றை மின்னேற்ற முடியும். மேலும் இது 360 பாகை கோணத்தில்
திரும்பி, மின்னேற்றப்படவேண்டிய சாதனங்களை பொருத்துவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது.
On Your Weigh Luggage Scale
உங்கள் பயணப்பையின் நிறையை இலகுவாகவும் கச்சிதமாகவும் நிறுக்க இந்த உபகரணம் உதவும். இதனால் நீங்கள் கொண்டு செல்லவேண்டிய பொருட்களின் அளவை திட்டமிட்டு பயணத்தை மேற்கொள்ளலாம்.